மூதாட்டியைத் தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவமணி (70). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இணையில் சாமி தங்கம் என்பவரின் கடையில் விற்பனைக்காக பூ வாங்கி இருக்கிறார். ஒரு கிலோ பூ, 1600 ரூபாய் எனக் கூறி உள்ளனர். ஆனால் மூதாட்டி தன்னிடம் 1500 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் 100 ரூபாயை அடுத்த நாள் தருவதாகவும் கூறி இருக்கிறார்.
ஆனால் சாமி தங்கம் என்பவரின் கடையில் வேலை செய்யும் அருண் (20) என்ற வாலிபர் மீதி பணம் 100 ரூபாயையும் தற்போதைய தர வேண்டும் எனக் கூறி, மூதாட்டியின் கையை திருகி கையில் இருந்த கைப்பேசியையும் உடைத்து விட்டதாகத் தெரிகிறது. மூகாம்பிகை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியதாகவும், தலை ஒரு மூத்த குடிமகள் என்று கூட பார்க்காமல் நடந்து கொண்டதாகவும் அவர், அதனால் அருள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க கோவை மாவட்ட ஆட்சியரகம் வந்த தேவமணி, தன்மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.