பொள்ளாச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆய்வு!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊஊராட்சி ஒன்றியம் ஆச்சிப்பட்டி ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடையில் எதிர்வரும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருளான முழுநீள கரும்பின் தரத்தினை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்,
இந்த ஆய்வுகளின்போது. கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை சுதா, உதவிக் கோட்ட பொறியாளர் கௌசல்யா. ஆனைமலை வட்டார அலுவலர்கள் சில்வியா, பொள்ளாச்சி வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் ஆச்சிப்பட்டி பிரிவில் இருந்து அமீன் வஊத்துக்குளி வரை 8.87 கி.மீ நீளத்தில் ரூ.73.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மேற்கு புறவழிச் சாலை பணியினையும், சமத்தூர் ஓடை பகுதியில் அணுகுபாலம் அமைப்பது தொடர்பாகவும் ஊரக வளர்ச்சித துறையின் சார்பின் அங்கலக்குறிச்சி ஊராட்சியில் ரூ.299 கோடி மதிப்பீட்டில் ஆழியார் சாலை இரண்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அங்கலக்குறிச்சி ஊராட்சி வேடசந்தூர் கிராமத்தில் ரூ.240 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் நர்சரியில் நாற்றாங்கால் அமைத்து 5000 நாற்றுகல் பராமரிக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.