அமெரிக்காவைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
வெனிசுலா நாட்டை விட்டு அமெரிக்காவை வெளியேற வலியுறுத்திக் கோவை உக்கடம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெனிசுலா நாட்டில் தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்க ராணுவம் அந்நாட்டின் அதிபர் மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகக் கோவை உக்கடம் பகுதியில் சிபிஐ, சிபிஎம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட இடது சாரி கட்சியினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வெனிசுலா நாட்டை விட்டு அமெரிக்கா ராணுவம் வெளியேற வேண்டும், போதை பொருள் விவகாரம் எனக் கூறி வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா சூறையாட முயல்கிறது. அதனை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர்