கோயம்புத்தூர்செய்திகள்

கோவை: ஜன.10 முதல் 13 வரை வீட்டு கழிவுப்பொருட்கள் சேகரிப்பு சிறப்பு முகாம்கள்

கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் பெரிய அளவிலான வீட்டு கழிவுப்பொருட்கள் சேகரிப்பு சிறப்பு முகாம்கள் – ஜனவரி 10,11,12 மற்றும் 13, 2026 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது…!

கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய வீட்டு கழிவுப்பொருட்கள் ஆகியவற்றை முறையாக அகற்ற, வருகின்ற, ஜனவரி 10,11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு சேகரிப்பு முகாமை நடைபெற உள்ளது.

இந்த நான்கு தினங்களிலும், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து மேற்கண்ட பெரிய அளவிலான கழிவுப்பொருட்களை வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள சேகரிப்பு இடங்களுக்குக் கொண்டு வந்து ஒப்படைக்கலாம். அத்துடன், மக்கள் இவ்வகை கழிவுகளைத் தெருவோரம், சாலைகளில் அல்லது காலி இடங்களில் விட்டுவிடாமல், இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், வார்டு அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் சேகரிப்பு மையங்களாகச் செயல்படும் மேலும் விவரங்களுக்குத் தங்கள் வார்டு சுகாதார மேற்பார்வையாளரை தொடர்பு கொள்ளலாம். கழிவுகளை முறையாக நிர்வகித்து, சுத்தமான கோயம்புத்தூரை உருவாக்கும் இம்முயற்சிக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட மண்டல உதவி எண்களில் தொடர்பு கொள்ளவும்: 1.வடக்கு மண்டலம் (North Zone): 89259 75980, 2மேற்கு மண்டலம் (West Zone): 8925975981, 3.5 (Central Zone): 89259 75982, 4. (South Zone): 90430 66114, 5. 10 (East Zone): 89258 40945 இணையதளம் www.ccmc.gov.in மேற்கண்ட தகவலைக் கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!