Othersஇந்தியா

மிஸ் பண்ணாதீங்க: இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,000 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,000 குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: குரூப் ‘டி’ (நிலை 1)

காலியிடங்கள்: 22,000; சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்து (என்சிவிடி, எஸ்சிவிடி) அல்லது என்சிவிடியால் வழங்கப்படும் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முடித்துச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2026 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, உடற் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளி, திருநங்கைகள் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbapply.gov.in, https://www.rrbchennai.gov.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.1.2026 முதல் 20.2.2026 இரவு 11.59மணிவரை விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!