கோயம்புத்தூர்செய்திகள்

பொங்கல் விடுமுறை முன்னிட்டு கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, கோயம்புத்தூர் – சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்புத்தூரிலிருந்து ஜனவரி 11, 18 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் கோவை – சென்னை விரைவு ரயில் (எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்குச் சென்னை நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து ஜனவரி 12, 19 ஆகிய திங்கள்கிழமைகளில் இரவு 11.25 மணிக்குப் புறப்படும் சென்னை – கோவை விரைவு ரயில் (எண்: 06033) மறுநாள் காலை 9 மணிக்குக் கோவை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

போத்தனூா் – சென்னை இடையே சிறப்பு ரயில்: போத்தனூரிலிருந்து ஜனவரி 13, 20 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இரவு 12.35 மணிக்குப் புறப்படும் போத்தனூா் – சென்னை சிறப்பு ரயில் (எண்: 06024) மறுநாள் காலை 10.30 மணிக்குச் சென்னை நிலையத்தைச் சென்றடையும்.

சென்னையிலிருந்து ஜனவரி 14, 21 ஆகிய புதன்கிழமைகளில் பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் சென்னை – போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06023) இரவு 11.15 மணிக்கு போத்தனூா் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

மங்களூரு – சென்னை இடையே சிறப்பு ரயில்: கா்நாடக மாநிலம், மங்களூரிலிருந்து ஜனவரி 13-ஆம் தேதி அதிகாலை 3.10 மணிக்குப் புறப்படும் மங்களூரு – சென்னை சிறப்பு ரயில் (எண்: 06126) அன்று இரவு 11.30 மணிக்குச் சென்னை சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, சென்னையிலிருந்து ஜனவரி 14-ஆம் தேதி காலை 4.15 மணிக்குப் புறப்படும் சென்னை – மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06125) இரவு 11.30 மணிக்கு மங்களூரு நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

செங்கோட்டை – போத்தனூா் இடையே சிறப்பு ரயில்: செங்கோட்டையிலிருந்து ஜனவரி 14-ஆம் தேதி இரவு 8.45 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை – போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06026) மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூா் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூா், பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!