சட்டகல்லூரி மாணவிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை – போலீஸ் பணியிடை நீக்கம்
சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்த சட்டகல்லூரி மாணவிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்த காவலர் சேக் முகமது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் சேக் முகமத். இவர் பாதுகாப்பு பணிக்காகச் சென்னை சென்று விட்டுக் கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து கோவைக்கு இன்டர்சிட்டி ரயிலில் வந்து வந்தார். இதே ரயிலில் சென்னையில் சட்ட கல்லூரியில் பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி கோவைக்கு வந்தார். ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டு இருந்தபொழுது அருகே அமர்ந்து இருந்த காவலர் சேக் முகமத் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது செல்போனில் அதை வீடியோ பதிவு செய்து உள்ளார். பின்னர் இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து அரக்கோணம் ரயில் நிலையத்தில், காவலர் சேக் முகமதுவை ரயில்வே போலீசார் இறக்கி விட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ததுடன், உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கபட்டது. இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள்,
ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்திலிருந்து காவல் சேக் முகமத் பணியிடை நீக்கம் செய்து விட்டனர். தொடர்ந்து போலீசார் சம்பவம்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.