இந்தியா

கேரளாவில் பயங்கரம்:  திருடன் எனச் சந்தேகப்பட்டு வெளிமாநில தொழிலாளி அடித்துக் கொலை – 5 பேர் கைது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வாளையார் பகுதியில், திருடன் எனச் சந்தேகப்பட்டு வெளிமாநில தொழிலாளி ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த ராமநாராயண் யதாவ் (31) இவர்  வாளையாறு பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த நேற்று  மாலை, இவர் ஒரு வீட்டின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவர் திருட வந்ததாகக் கருதி அவரைச் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் விசாரணை நடத்துவதாகக் கூறி, கும்பலாகச் சேர்ந்து ராமநாராயணனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம்குறித்து தகவல் அறிந்த வாளையாறு போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரே இது தொடர்பாக 10 பேரைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அட்டப்பள்ளத்தை சேர்ந்த பிரசாத், ​முரளி, அனந்தன், ​அனூப், விபின் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில்  “உயிரிழந்த ராமநாராயணனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவர் மது போதையில் இருந்துள்ளார். ஆனால், அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்தனர். 

கடந்த 2018-ம் ஆண்டு கேரளா மாநிலம்  அட்டப்பாடியில் மது என்ற பழங்குடியின இளைஞர் உணவைத் திருடியதாகக் கூறி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!