இ-பைலிங் முறையை நிறுத்தக்கோரி வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்!
இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்கக் கோரி கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றங்களில் போதிய ஊழியர்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் இ-பைலிங் முறையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் ஜேக் அமைப்பினர் இணைந்து இ-பைலிங் முறையை நிறுத்தக் கோரிக் வாயில் கருப்பு துணியைக் கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிகுமார், மாநில பொருளாளர் மாசேதுங், செல்வம், வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.