உலகம்

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!

பிரேசிலில் உள்ள சுதந்திர தேவி சிலை பலத்த காற்று காரணமாக சரிந்து விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது

பிரேசிலின் நாட்டின் குவாய்பா (Guaíba) நகரில் அமெரிக்காவின் புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையைப் போலவே 24 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பிரதி சிலை 2020ம் ஆண்டு. அமைக்கப்பட்டுள்ளது. கார் பார்க்கிங் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்தச் சிலையானது பலத்த காற்று காரணமாகச் சாய்ந்து விழுந்தது. அப்போது அங்குப் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. 

ஆனால் பிரேசில் நாட்டின் அமலில் உள்ள தொழில்நுட்ப தர நிலைகளைக் கருத்தில் கொண்டு தான் இந்தச் சிலை உருவாக்கப்பட்டதாக அந்த ஷாப்பிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிலை அசையத் தொடங்கியதும் உடனடியாக அந்த நிறுவனம் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி அந்தப் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. சிலை உடைந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. வானிலை தவிர்த்து வேறு எதாவது காரணம் உள்ளதாக என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் சிலை அமைக்கப்பட்ட இடத்தை மதிப்பீடவும் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், பெருநகரப் பகுதிக்கு முன்னதாகப் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இப்பகுதியில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாகக் குளிர் காற்று காரணமாக வழக்கத்தைவிட பலத்த காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சிலையானது 11 மீட்டர் அடி உயர அடித்தளத்தில் நிறுவப்பட்ட இந்த நிலை சுமார் 114 அடி உயரம் கொண்டது. ஆனால் மேல் பகுதி மட்டுமே இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!