கோவை கவுண்டம்பாளையத்தில் தனியார் பேருந்து விபத்து – உயிர் தப்பிய பயணிகள்
கோவை கவுண்டம்பாளையம் அருகே இரும்பு கம்பி லோடு ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பேருந்து பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை காந்திபுரத்திலிருந்து பிரஸ் காலணி வரை இயக்கப்படும் தனியார் பேருந்து வழக்கம்போலப் பிரஸ் காலணியிலிருந்து காந்திபுரம் நோக்கி வந்தது. அப்போது மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது, முன்னால் இரும்பு கம்பி லோடு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று வேகத்தைக் குறைத்தாகக் கூறப்படுகிறது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்துக் கம்பி லோடுடன் இருந்த வாகனத்தின் மீது மோதியது. இதில் பேருந்து முன் கண்ணாடி சேதமாகி இரும்பு கம்பிகள் பேருந்துக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பேருந்துகள் பயணிகள் யாரும் காயம் படாமல் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவுண்டம்பாளையம் போலீஸார் தனியார் பேருந்து மற்றும் சரக்கு வாகனத்தைச் சாலை மீட்டு சாலை ஓரத்தில் நிறுத்தினர். மேலும் விபத்து தொடர்பாகப் பேருந்து ஓட்டுநர் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் கவுண்டம்பாளையம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.