தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சர்வதேச விஞ்ஞானியாவார்கள் – மயில்சாமி அண்ணாதுரை
விண்வெளி துறையில் நாம் தற்போது செல்லும் வேகத்தில் சென்றால் 2036 -ல் இந்திய விண்வெளி நிலையம் அமைவது சாத்தியம் தான் என முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், கணினி முதல் முறையாக வந்தபோது அலுவலகங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டது. இப்போது பள்ளி, கல்லூரியென அனைத்து இடங்களுக்கும் கணினி பயன்பாடு வந்துவிட்டது.
மருத்துவ கல்லூரிகளிலும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க உள்ளோம். இதன் மூலம் ரொபோட்டிக் அறுவை சிகிச்சை செய்ய மாணவர்களும் அங்கு உருவாக்கப்படுவார்கள். அதிக மக்கள் தொகையுள்ள இந்தியாவில் அதிகளவு மருத்துவர்களும் உள்ளனர்.
அதன் காரணமாகத்தான் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகக் கோவை மாவட்டத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்பை நாம் உருவாக்க முடியும்.
மேலும் இங்கு ரொபோட்டிக் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் உள்ளனர். பயனாளிகளும் உள்ளனர். இதனால் ரொபோட்டிக் அறுவை சிகிச்சை செய்யத் தேவையான கருவிகளை உற்பத்தி வேண்டும். ரொபோட்டிக் அறுவை சிகிச்சை மருத்துவத்துறையை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் செல்கிறது.
குலசேகரப்பட்டினம் ஏவுகணை தளம் இன்னும் 1.5 அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் தயாராகும். இங்குச் சிறிய அளவிலான செயற்கைகோளை வைத்துக் கூட அனுப்ப முடியும். அங்குத் தேவையான தகவல் தொழிற்நுட்ப வசதி, சாலை போக்குவரத்து, உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொண்டால் போதும்.
இந்திய விண்வெளி நிலையம் அமைய வேண்டும் என்றால், மனிதர்கள் சென்று வரும் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும். ஸ்பேடெக்ஸ் என இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும், பிறகு பிரிந்து வரும் வகையில் செய்தோம். அந்தப் பரிசோதனை வெற்றிகரமாகியுள்ளது. அடுத்த கட்டம் சந்திரயான் – 4 வெற்றிகரமாகும். இதனைக் கணக்கிட்டு பார்த்தால் வரும் 2036 ல் இந்திய விண்வெளி நிலையம் முதல் கட்டம் சாத்தியம் என நினைக்கிறேன்.
அரசுப் பள்ளி மாணவர்களும் சிறிய செயற்கைகோள் தயாரிக்கும் வகையிலான பயிற்சி வழங்கப்பட்டு, அது மாமல்லபுரத்திலிருந்து அனுப்பி சோதனை செய்தோம். அதே போலப் பள்ளி மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்கம், கணிதவியல் ஆகியவை கற்றறியும் முயற்சிகளையும் செய்து வருகிறோம்.
தமிழக பள்ளியில் படித்தவர் சர்வதேச அளவில் சதுரங்க வீரர்களாக உருவாக்குகிறோம். அப்படிபட்ட தமிழ்நாடு விஞ்ஞானிகளை உருவாக்க முடியும். அதற்கான ஆரம்ப கட்ட வெற்றிகளைப் பார்த்துள்ளோம்.
பிக் பேங்க் என்ற சர்வதேச அளவிளான போட்டியை மாநில அளவில் வைத்தோம். அதில் கோவை பள்ளியில் படித்த இரண்டு மாணவர்கள் மலேசியாவில் நடந்த உலக அளவிலான போட்டியில் வெற்றி பெற்று வந்துள்ளனர். அடுத்த கட்ட பரினாமம் நோக்கிச் செல்கிறோம். சர்வதேச விஞ்ஞானிகளை நாம் உருவாக்குகிறோம் இதுவரை வெளியே தெரியவில்லை ஆனால் நிச்சயம் இனி தெரியும் என்றார்.