தமிழ்நாடு

புதிய தொழிலாளர் சட்டம்: தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்கம் வரவேற்பு

புதிய தொழிலாளர் குறியீடுகளை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்ததை TANSTIA – தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்

இது குறித்து வெளியிட்டுள்ள குறிப்பில்,

புதிய தொழிலாளர் குறியீடுகளை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்ததை நாங்கள் வரவேற்கிறோம். 29 தனித்தனியான சட்டங்களை 4 முக்கிய குறியீடுகளாக ஒருங்கிணைத்தது தொழிலும் தொழிலாளர்களும் பயனடையும் முன்னேற்றமான மாற்றமாகும்.

முக்கிய நன்மைகள்:

  1. அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயமாக நியமன ஆணை (Appointment Order) வழங்கல்.
  2. 10 பேருக்குக் குறைவாக வேலை செய்யும் நிறுவனங்களுக்கும் ESI வழங்கப்பட்டு, அதிகமான தொழிலாளர்கள் காப்பீட்டின் கீழ் வருதல்.
  3. ஒரே ஆண்டில் 30 நாட்கள் மட்டுமே வேலை செய்தாலுமே Bonus பெறும் உரிமை.
  4. உரிமம் (Licence) பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, தொழில் செய்வது மேலும் வசதியாகிறது.
  5. 40 பேருக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் வருடாந்திர மருத்துவ பரிசோதனை கட்டாயம்; எதிர்காலத்தில் இது மேலும் விரிவாக்கப்படும்.
  6. அனைத்து ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவது கட்டாயம்.
  7. ஒரு வருட சேவை முடித்தாலே Gratuity பெறும் உரிமை.
  8. இந்திய அளவில் ஒரே மாதிரியான குறைந்தபட்ச சம்பள அமைப்பு, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் குழப்பத்தை நீக்குகிறது.

இந்த மாற்றங்கள் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உயர்த்துவதோடு, தொழில் வளர்ச்சி, வெளிப்படைத் தன்மை, மற்றும் வேலை வாய்ப்பின் முறையான அமைப்புகளை அதிகரிக்க உதவுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!