கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு: அடையாள அணி வகுப்பு
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, கோவை மத்திய சிறையில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் நண்பரிடம் நடந்தது.
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த நவ2. தேதி காரில் பேசிக் கொண்டிருந்த நண்பரைத் தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த பீளமேடு போலீசார், துடியலூர் அருகே தலைமறைவாக இருந்த சதீஷ் (30), கார்த்திக் (21), தவசி (20) ஆகிய மூவரை சுட்டுப் பிடித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மூவரும் சிகிச்சைக்குப் பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் நண்பருக்கு நீதிபதி முன்பு அடையாள அணிவகுப்பு நடத்தினர்.
இதற்காக ஒரு புறம் மட்டும் தெரியக்கூடிய கண்ணாடியுள்ள அறையிலிருந்து கைது செய்யப்பட்ட சதீஷ், கார்த்திக், தவசி மற்றும் மேலும் சிலருடன் நடந்த அடையாள அணி வகுப்பில் மூன்று குற்றவாளிகளையும் பாதிக்கப்பட்ட நபர்கள் உறுதி செய்துள்ளனர். இதனை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.