கருப்புக் கொடி, பலூன் பின்னால் திமுக உள்ளது – வானதி சீனிவாசன்
பாரத பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு வருகை தர உள்ளார் அதற்கான ஏற்பாடு பணிகளை கோவை விமான நிலையத்தில் பார்வையிட்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம் எல் ஏ பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தார்,
அப்பொழுது அவர் பேசும்போது: கோவை வருகை தருகின்ற மோடி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கின்ற வகையில் ஏற்பாடுகள் பற்றி எல்லாம் கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு செய்து கொண்டு உள்ளதாகவும், காவல் துறையினர் கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக உள்ளதாகவும், பாதுகாப்பு என்பது முக்கியம் தான் என்றாலும், கூட அவரை வரவேற்பதற்கு வருகை தரக் கூடிய கட்சியினுடைய தொண்டர்களுக்கு எந்தவித அசௌகரியம் இல்லாத மாதிரி அவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் மற்றும் அவரை வரவேற்பதற்கான கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்ற இடத்தை எல்லாம் காவல் துறையினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி, அந்த இடத்தை எல்லாம் ஒதுக்கி கொடுத்தால் உதவிகரமாக இருக்கும் என்றார்.
தொடர்ச்சியாக மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் காவல் துறை அதிகாரிகளிடம் பேசிக் கொண்டு உள்ளதாகவும், ஆனாலும் அவர்களுடைய ஒத்துழைப்பு என்பது விரைவாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக கூறினார்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் உடைய நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வது என்பது இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கு புதிய மறுமலர்ச்சியை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. அத்தனை விவசாயிகளுக்கும் இது உத்வேகம் அளிக்கும் என்றவர், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ரசாயன உரத்தின் உடைய பயன்பாடு என்பது மிக அதிக அளவில் உள்ளதாகவும், இங்கு மண்ணின் உடைய தன்மை அதற்கு உயிர் தன்மையை போக்குகின்ற அளவிலே மாறிக்கொண்டு உள்ளதாகவும், இந்த இயற்கை வேளாண்மை என்பது நமது முன்னோர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்னதாக அளித்துச் சென்று இருக்கக் கூடிய கோடை எனவும், இந்த கால கட்டத்தில் நமது மண்ணின் உடைய உயிர் தன்மையை பாதுகாப்பதற்கு இயற்கை விவசாயத்தை நோக்கி நமது விவசாயிகளை ஆர்வத்துடன் இயக்குவதற்கு நாளை பிரதமர் கலந்து கொள்ளுகின்ற கூட்டம் என்பது புதிய உந்து சக்தியை அளிக்கும் என நம்புவதாகவும், இந்த ஒரு நிகழ்ச்சிக்காக இவ்வளவு தூரம் வந்து இந்த விவசாயிகளை பிரதமர் சந்திப்பது தமிழகத்தில் ஒரு பெருமையாக பார்ப்பதாகவும், ஏனென்றால் தமிழகம் இயற்கை விவசாயம் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தனக்கென தனி இடத்தை கொண்டு இருக்கக் கூடிய தமிழகத்தின் இயற்கை விவசாயிகளுக்கு இந்த வாய்ப்பு பயன்படுத்தமாறு கேட்டுக் கொண்டார்.
அந்தக் கூட்டமைப்பும் இதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதலமைச்சரை கலந்து கொள்வதில்லை என்றும், நேரடியாக ராமேஸ்வரத்தில் பார்த்ததாகவும், அதற்கு முன்னதாக விமான நிலையத்திலும் பார்த்ததாகவும், அரசியல் காரணம் எதுவாக இருந்தாலும் கூட ஒரு நாட்டினுடைய பிரதமர் வருகின்ற போது மாநிலத்தின் முதல்வர் வரவேற்பு என்பது தான் தகுந்த நெறிமுறையாக இருக்கும் என்றும், அதேபோல் வேளாண்மை துறை அமைச்சர் இது போன்ற முன்னெடுப்புகள் எல்லாம் தமிழகத்திற்கு கிடைக்கும் போதெல்லாம் தமிழகத்தினுடைய சார்பில் அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இன்று சட்டப் பேரவையிலே வேளாண்மைத் துறைக்கு தனியாக ஒரு பட்ஜெட்டை இந்த அரசாங்கம் வந்த பிறகு தாக்கல் செய்ததாகவும், வேளாண்துறை பட்ஜெட்டி என்பது 80 சதவீதம் அறிவிப்புகள் என்பது மத்திய அரசாங்கத்தின் உதவியோடு தான் நிறைவேற்றுவதாகவும், மத்திய அரசின் நிதியை எடுத்துக் கொண்டு அதற்கு மாநில அரசு ஒரு பெயரை கூறி வேளாண்மை பட்ஜெட் போட்டுக் கொண்டு உள்ளதாகவும் கூறினார்.
இந்த இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்ற வகையில் அறிவிப்புகள் உள்ளதாகவும், அப்படி இருக்கின்ற போது மாநில அரசும் கூட இதுபோன்று விவசாயிகளோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுத்தால் தமிழகத்திற்கு நல்லது என்றார்.
முற்போக்கு அமைப்புகள் கண்டன போஸ்டர்கள் குறித்த கேள்விக்கு, வழக்கமாக ஏதாவது ? ஒரு கண்டனம் தெரிவிக்கின்ற போஸ்டர் ஏதாவது ? ஒரு போஸ்டர் போட்டால் கூட சட்டத்தின் படி அதை அச்சடித்த அச்சகத்தின் பெயர், தொலைபேசி எண் என்ன ? என்பதை தெரிவிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் யார் ?அடித்தாலும் சரி, எந்த ஒரு அமைப்புகள் அடித்தாலும் அது தான். ஆனால் முற்போக்கு அமைப்புகள் என்ற பெயரில் ஒரு போஸ்டர், தவறுதலான பொய் பிரச்சாரம், இரண்டு பிரிவுகள் இடையே வன்முறையை தூண்டும் விதமாக பிரிவினைவாத போஸ்டர்கள் பீகார் மக்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக மக்களை இழிவுபடுத்துவதாக கருப்புக் கொடி, சிறிது காலம் டெல்லியில் இருந்து நிதி உதவி வர வேண்டும் என்பதற்காக கருப்பு கொடிகள் இல்லாமல் இருந்ததாகவும், இப்பொழுது தேர்தல் வந்து விட்டது தி.மு.க எப்படியாவது மக்களின் கோபத்தை திசை திருப்புவதற்காக கருப்பு பலூன், கருப்புக் கொடி என்பதையெல்லாம் கையில் எடுத்து உள்ளதாகவும்,
குரங்கு குட்டிகளை வைத்து சூடு பார்க்கின்ற என்ற பழமொழியை போன்ற விதமாக
முற்போக்கு அமைப்புகள் என்பது சந்தேகமாக உள்ளதாகவும், தமிழக அரசினுடைய ஆதரவோடு செய்கின்றார்களா ? என்ற சந்தேகம் உள்ளதாகவும் ஏனென்றால் இந்தப் பிரிவினவாத அமைப்புகள், முற்போக்கு அமைப்புகளுக்கு பின்னால் தி.மு.க வும், தி.க வும் உள்ளதாக குற்றம் சாட்டியவர், ஏனென்றால் இந்தக் கருப்பு பலூன், கருப்புக் கொடி இந்த மாதிரியான விஷயங்களை தமிழக அரசு அனுமதித்தால் தமிழகத்தின் முதல்வர் எந்த இடத்திற்கு வந்தாலும் எந்த மாவட்டத்திற்கு வந்தாலும் பா.ஜ.க இதே போன்று செய்யும், ஏனென்றால் பாரத பிரதமர் வருகின்ற போது தமிழகத்திற்கு ஒரு பங்களிப்பு கொடுக்க வரும் பொழுது இதை கடுமையான எச்சரிக்கையோடு யார் ?அந்த நபர்கள் என கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்தார் .
எஸ்.ஐ.ஆர் பொருத்த வரை தி.மு.க அரசு எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள். இதற்கு அரசே ஸ்பான்சர் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. இப்படி இருக்கும் பொழுது தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் எவ்வாறு முழுமையாக ஒத்துழைப்பு நல்குவார்கள் ? என கேள்வி எழுப்பியவர், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்களோடு சேர்த்து இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம், என்றும் அரசியல் காரணத்திற்காக இதில் ஏதாவது ? குளறுபடி செய்ய முடியுமா ? என நினைக்கிறார்கள் கள்ள வாக்காளர்களை அப்படியே வைத்துக் கொள்ள முடியுமா ? என நினைக்கிறார்கள் என்றவர், கள்ள ஓட்டு போடுவது தி.மு.க விற்கு பெரிய பலம் என்றார்.
பிரதமரை வரவேற்க ஐம்பதாயிரம் பேர் கலந்து கொள்ளும்படி ஏற்பாடுகளை செய்து உள்ளோம் ஏபி முருகானந்தம் தலைமையில் வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்றும் கூட்டணி கட்சிகள் யாரும் பிரிந்து செல்லவில்லை அனைவரும் எங்களுடன் தான் இருக்கிறார்கள் தேர்தல் நெருங்கும்பொழுது கட்சியின் தலைமை கூட்டணி விஷயங்களை அணுகும் என்றார்.
பீகார் வெற்றிக்கு பிறகு பீகார் மாநிலம் போலவே தமிழ்நாடு வருமா என்று மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது ஆவல் உள்ளது என்று கூறினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுகவும் சேர்ந்து கலந்து கொள்கிறார்கள்,கிளியாக இருப்பது திமுக மட்டும் தான் திமுகவை எவ்வாறு வீட்டிற்கு அனுப்புவது என்பதுதான் எங்களுடைய நோக்கம் என்றார்