தமிழ்நாடு

வரும் 23ஆம் தேதி பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து!

திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “பெங்களூருவிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்-12608) வருகிற 23-ந் தேதி வரையும், காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அன்று கோவையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12680) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் ( எண்: 16054) 23-ந் தேதி அரக்கோணம் – சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அன்று சென்னை சென்ட்ரலிலிருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (எண்: 12679) சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலிலிருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12607) 23-ந் தேதி சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அன்று சென்ட்ரலிலிருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16053) சென்ட்ரல்-அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலிலிருந்து கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20643) வரும் 23-ந் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3.15 மணிக்குச் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!