கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 9வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 9 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் 9 வது முறையாக ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல்மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து கோவை மாநகர் வெடிகுண்டு கண்டறியும், நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள்மூலம் ஒவ்வொரு அறையாகத் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் அலுவலகத்தின் பிரதான கட்டடங்கள், வாகன நிறுத்தும் இடங்கள், பதிவறைகள், கூட்டரங்குகள், பின்புற வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. கடந்த நான்கு மாதங்களில் 9 வது முறையாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.