துவங்கிய கோவை விழா – பழமையான கார் ஊர்வலம்!
கோவை விழாவை முன்னிட்டு 60 முதல் 120 ஆண்டு பழமையான கார்களின் அணிவகுப்புகள் பார்வையாளர்களில் வெகுவாகக் கவர்ந்தது.
கோவை விழா வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு பகுதியாக நடைபெற்று வரும் இந்த விழாவில் இன்று பழங்கால கார்கள் அணிவகுத்து செல்லும் காட்சி நடைபெற்றது. இது காண்போரை வியப்பில் அழுத்தியது.
https://www.facebook.com/share/v/17HEX3XZ26
அறுபது வருடம் முதல் தொடங்கி 120 வருடமான பழமையான கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியிலிருந்து கிளம்பிய இந்தக் கார்கள் கோவை மாநகரத்தின் பல பகுதிகளைச் சுற்றி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.