எஸ்ஐஆர் விவகாரத்தில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை – எடப்பாடி பழனிசாமி
எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலைப் பதியவைத்தால் சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக வழக்கில் இணைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு வாரம் முன்பு கோவை விமான நிலையத்தின் அருகில் , போதை ஆசாமிகள் 3 பேர் , காரில் கல்லூரி மாணவியும் அவரது ஆண்நண்பரும் பேசிக்கொண்டு இருந்த போது, ஆண் நண்பரை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர், இது கொடுமையான செயல், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இப்படி நடந்து இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என தெரிவித்தார்.
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. காவல் துறையினரைக் கண்டு அஞ்சாமல் குற்றம் புரிபவர்கள் நடந்து கொள்கின்றனர். காவல் துறை ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா பாதுகாப்பு அளிக்கிறதா என்ற நிலைதான் இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு இல்லாத நிலை இருக்கிறது. போதைப்பொருள் அதிகரித்துள்ளது.
போதை ஆசாமிகளால் இந்தச் சம்பவஙகள் நடக்கின்றன. நிரந்தர டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை. வேண்டப்பட்டவர் வர வேண்டும் என்பதற்காக நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை. டிஜிபி நியமனத்தில் இந்த அரசு முறையாக விதிகளைப் பன்பற்றவில்லை.
யுபிஎஸ்சி 3 பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்பியும் டி.ஜி.பி நியமனம் செய்யபப்டவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடரபப்ட்டு மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது. ஏன் இந்தப் பாரபட்சம் பார்க்கின்றனர்.
எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக தான் ஆட்சியமைக்கும். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தானென அமித்ஷா ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டார். அதிமுக ஆட்சியைத் திமுகவால் குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் திட்டம்(எஸ்ஐஆர்) கொண்டு வரப்பட்டு சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள், இடமாற்றம் ஆனவர்கள் பெயர்கள் தொடர்கிறது.
எஸ்ஐஆர் என்றாலே பதறுகிறார்கள் ஏன் பதறுகிறார்கள். இதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு மாதம் என்பது போதுமான காலம். இறந்தவர்கள் நீக்கபப்டக் கூடாது என்பது தி.மு.க வின் நோக்கம். தேர்தலின்போது திருட்டு ஓட்டு போட வசதியாக இருக்கிறது. அது தடுக்கப்படும் என்பதால் அதுதான் இவர்களுக்குப் பயம். வாக்குகள் பறிபோகும் என அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயல்கின்றனர். திட்டமிட்டே மக்ளை குழப்புகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலைப் பதியவைத்தால் சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக வழக்கில் இணைந்துள்ளது. எஸ்ஐஆர் இதற்கு முன்பு 8 முறை நடந்துள்ளது- நிதியே ஒதுக்காமல் தி.மு.கத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர். செங்கோட்டையன் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்.
2026 பேரவைத் தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டியென விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு பேசுவது இயல்பு என அவர் பதிலளித்தார்.
நான்கரை ஆண்டுகளில் எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, இது தொடர்பாக
வெள்ளை அறிக்கை கேட்டபொழுது வெள்ளை பேப்பரை காட்டினர், இதுதான் அவர்களின் பதில் எனவும் மக்களின் சந்தேகங்களைப் போக்குவதற்கு கேள்விகள் கேட்டால் வெள்ளை பேப்பர் காட்டுகின்றனர்.
இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார். 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது என ஸ்டாலின் சொல்கிறார் எனவும் அப்படி நிறைவேற்றப்பட்டிருந்தால் மொத்தம் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து இருக்க வேண்டும் எனவும் எங்கே வேலை கிடைத்ததது, அனைத்தும் பொய் எனவும் தெரிவித்தார்.
வெள்ளைப் பேப்பர் காட்டியதுதான் உண்மை, எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை எனவும் தெரிவித்தார். பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர், ஜல்லி குவாரிகள் நடப்பதிலும் ஊழல் நடப்பதாகவும், ஒவ்வொரு குவாரிக்கும் 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என வாங்குவதாகவும் இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.