அனிருத் இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் – லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸில் ரசிகர்களுடன் சேர்ந்து ’கூலி’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பார்த்து ரசித்தார்.
பின்னர், கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2025 இல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதையடுத்து
மாணவர்களிடம் உரையாற்றிய அவர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்படத் தயாரிப்பில் ஆர்வத்தின் முக்கியத்துவம் மற்றும் பார்வையாளர்களின் திருப்தியைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒருபோதும் திரைப்படங்களை உருவாக்க மாட்டார் என்பது குறித்தும் பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் தங்கள் படத்தின் இசையில் AI-ஐப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்று கேட்டதற்கு, “எதிர்காலத்தில் அனிருத் இல்லாமல் நான் ஒருபோதும் படம் செய்ய மாட்டேன். அவர் சினிமாவை விட்டுவிட்டால், இசைக்கு AI-ஐப் பயன்படுத்துவது பற்றி நான் யோசிக்க வேண்டியிருக்கும். ஆனால் அது விரைவில் நடக்கப்போவதில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், AI உதவியுடன் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் குரல் சேர்க்கப்பட்டது.
வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதைவிட அதனுடைய உதவி அதிகமாக இருக்கும். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்” என்று கூறினார்.