ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!
கோயம்புத்தூர்: ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, கிணத்துக்கடவு, சூலூர். எஸ் எஸ் குளம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றியத் தலைப்பில் கீழ் காலியாக உள்ள பணியிடங்களான ஈப்பு ஓட்டுநர் / அலுவலக உதவியாளர்/இரவுகாவலர் காலிப் பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பான விபரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இணையதள வழியாக 01.09.2025 முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசிதேதி. 30.09.2025, (இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்). என மாவட்ட ஆட்சித் தலைவர்திரு.பவன்குமார் க.கிரியப்பனவர்இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.