கோயம்புத்தூர்செய்திகள்

கோவை: வனப்பகுதியில் இறந்த நிலையில் ஆண் சிறுத்தை உடல் மீட்பு.

கோவை நரசீபுரம் வனப்பகுதியில் இறந்த நிலையில் ஆண் சிறுத்தை உடலை வனத்துறையினர் மீட்டு, இறப்புக்கான காரணம்குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நரசீபுரம் வனப்பகுதியில் போளூவாம்பட்டி வனத்துறை ஊழியர்கள் இன்று ரோந்து சென்றனர்.  அப்போது வால்கரடு என்ற பகுதி அருகே வந்தபோது, இறந்த நிலையில் சிறுத்தை உடல் கண்டறியப்பட்டது.

இதையடுத்து வனத்துறை ஊழியர்கள், மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட உயர்  அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.  பின்னர் தகவலறிந்து அங்கு வந்த கால்நடை மருத்துவர் குழுவினர் சிறுத்தைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். 

முதல் கட்ட ஆய்வில்  இறந்த நிலையில் மீட்கப்பட்டது சுமார் 7 வயது மதிக்கத் தக்க ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தையின் இறப்புக்கான காரணம்குறித்து அறிய உடல் உறுப்பு மாதிரிகள் பரிசோதனைக்காகப் புனேவில் உள்ள  ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தொடர்ந்து அதே வனப்பகுதியில் சிறுத்தையின் உடல் வனத்துறை உயர் அதிகாரிகள், கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில் ஏறியூட்டப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!