தாயை திட்டியதால் ஆத்திரம் – முதியவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை
தாயை திட்டியதால் ஆத்திரம் – கோவையில் முதியவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த இளைஞரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2018 -இல் தாயை திட்டியதாக கூறி கோவை சிறையில் இருந்தவர் தலையில் கல்லை போட்டு கொன்றவர் என்பது குறிப்பிடதக்கது..
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலணி சாலை ஓரத்தில் போர்வையால் மூடப்பட்ட நிலையில் முதியவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் சென்று பார்த்தபோது அந்த நபர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவரது உடலைப் போலீசார் மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் ? என விசாரித்த போது, அவர் பேரூர் பகுதிகளில் சுற்றி திரிந்து வந்ததாகவும், சாலை ஓரங்களில் தங்கியிருந்தவர் என தெரிந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் பொருந்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தீவிரபடுத்தினர். அப்போது இளைஞர் ஒருவர் அப்பகுதியில் கடந்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அடையாளங்களை கொண்டு கோவை பேரூர் பகுதியை சேர்ந்த விஜய் (21) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் முதியவரை விஜய் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
விநாயகர் சதூர்த்திக்கு முன் தினம் இரவு இருவரும் சாலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அந்த முதியவர் விஜய்யின் தாய் குறித்து அவதூறாக பேசியதால் ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர் விசாரணையில் விஜய் ஏற்கனவே கடந்த 2018 கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் இருந்த போது, ரமேஷ் என்பவர் விஜயையின் தாயை திட்டியதாக கூறி தலைமையில் கல்லை போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் பிணையில் வெளியே வந்த விஜய் இரண்டாவது கொலையை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து விஜயை விசாரணைக்கு பின் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.