உயிர் காக்க 8 கி.மீ தூரம் முதியவரைத் தொட்டிலில் கட்டித்தூக்கி சுமந்து சென்ற பழங்குடியின மக்கள்!
வால்பாறை மலைப்பகுதியில் உயிர் காக்க முதியவரைத் தொட்டிலில் கட்டித்தூக்கி பழங்குடியின மக்கள் 8 கி.மீ தூரம் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உடும்பன் பாறை மலை கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு திடீரென உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் காரணத்தால் தொட்டில் கட்டி தூக்கி மருத்துவ சிகிச்சைக்காகச் சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று நல்லமுடி பூஞ்சோலை என்ற பகுதியிலிருந்து மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
எனவே இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை நடவடிக்கை இல்லை.
உடும்பன் பாறை மலைகிராம மக்களின் நலன் கருதி உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் சாலை வசதி அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்