இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநாடு துவக்கம்!
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், 20 -வது கோவை மாவட்ட மாநாடு – மேலதாளங்கள் முழங்கப் பிரம்மாண்ட பேரணியுடன் துவங்கியது.
கோவை வடகோவை சிந்தாமணி அருகே சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்ட பாரம்பர கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கி, மேட்டுபாளையம் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடிகளைக் கையில் ஏந்தி ஏராளமானோர் பேரணியாகத் தெப்பக்குளம் மைதானம்வரை வந்தனர்.
தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவை மாவட்ட தலைவர் எம்.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் எம்.தினேஷ்ராஜா வரவேற்புரையாற்றினர், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன், மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மத்திய குழு உறுப்பினர் எஸ்.மணிகண்டன், மாவட்டச் செயலாளர் ஆர்.அர்ஜூன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ந.ராஜா, பி.நித்யாஸ்ரீ, மாவட்டத் துணைத் தலைவர்கள் எம்.மணிபாரதி, எஸ்.நிஷார்அகமத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முத்து முருகன், ஆர்.தீபீகா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.