கோவையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேக்கரி உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு ஆலோசனை!
உணவு பாதுகாப்பு சட்டங்களை முறையாகப் பேக்கரி உரிமையாளர் பின்பற்ற வேண்டும், பாதுகாப்பான உணவுகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தெரிவித்துள்ளார்.
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்க கூட்டரங்கில், உணவு பாதுகாப்பு சட்டம், மற்றும் விதிமுறைகள்குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில் நடைபெற்றது.
இதில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேக்கரியில் தயாரித்து விற்பனைச் செய்யப்படும் உணவுப் பொருட்கள் தயாரிப்பது, விநியோகிப்பது, கழிவுகளை சுத்தமாக அப்புறபடுத்துவது, உணவு பாதுகாப்பு சட்டம் 2006 ல் உள்ள விதிகள் மற்றும் அதனை பின்பற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அதே போல பேக்கரி உரிமையாளர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது: கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தில், சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் 2006 உணவு பாதுகாப்பு சட்டம் குறித்தும், விதி முறைகள் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கு தரமான உணவுகள் வழங்க நோக்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
குறிப்பாக பேக்கரி உரிமையாளர் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஊழியர்களுக்கான முறையான பயிற்சிகள், உணவு பொருட்கள் உள்ள இடங்களை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், கழிவுகளை எவ்வாறு முறையாக அகற்ற வேண்டும் போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.
அதே போல இனி வரும் காலங்களில், பேக்கரி உணவுகள் தொடர்பாக மக்கள் குறைகள் இருந்தால் புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிகள் உள்ளது.
தினமும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் அன்மையில் கோவாயில் உள்ள 37 குடோன்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம்.
அதில் 278 கிலோ காலாவதியான பேரிட்சை பழங்களை அகற்றினோம் என கூறினார்.