நிஃபா அச்சம் தேவையில்லை – மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தகவல்.!
கோவை மாவட்டத்தில் நிஃபா பாதிப்பு இல்லை, மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லையெனக் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் வடவள்ளி, கருமத்தம்பட்டி, ஆலாந்துறை, ஆனைமலை, அன்னூர், மலுமிச்சம்பட்டி ஆகிய 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதில் 42 சேவைகள் தொடர்பாகத் துறை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே போலக் காவல் துறை, உடல் பரிசோதனை, மற்றும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதே போலப் பொதுமக்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய உதவியாகத் தன்னார்வலர்களும் பணியில் ஈடுபட்டனர். இதில் வடவள்ளி பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் மனுக்கள்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதுகுறித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் கூறியதாவது : தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைத் துவங்கியுள்ளோம். கோவை மாவட்டத்தில் 6 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 42 சேவைகள் வழங்குகிறோம்.
மேலும் மகளிர் உரிமை தொகைக்காக முகாமில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல முகாமிற்கு வரும் பொதுமக்களுக்காக இலவச உடல் பரிசோதனை முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதே போலக் காவல் துறை சார்பில் மே ஐ ஹெல்ப் யூ என்ற பெயரில் போலீஸார் உதவி மையமும் வைக்கப்பட்டது. கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பு உள்ளது. அதன் காரணமாகக் கோவை எல்லையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் பாதிப்போ, அறிகுறியோ கிடையாது.,
மேலும் முன்னெச்சரிக்கை அறிவுறைகள் செய்தி குறிப்புமூலம் வழங்கப்பட்டுள்லது. மேலும் பொதுமக்கள் யாரும் அச்சம்பட தேவையில்லையெனத் தெரிவித்தார்.