ஜூலை 18இல் துவங்குகிறது ‘கோயம்புத்தூர் புத்தக திருவிழா 2025’
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித் துறை கொடிசியா இணைந்து நடத்துகின்ற கோயம்புத்தூர் புத்தக திருவிழா 2025 வருகின்ற 18-07-2025 முதல் 27-07-2025 வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் புத்தக திருவிழா தலைவர் ராஜேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) அபிராமி. கூடுதல் ஆட்சியர்வளர்ச்சி திருசங்கேத் பல்வந்த வாகே மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது நிறைமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித் துறை பொது நூலகத் துறை கொடிசியா இணைந்து புத்தக திருவிழா 2025 வருகின்ற 18.07.2025 முதல் 27.07.2025 வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் 250 அரங்குகளில் இலட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும். விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து புகழ்பெற்ற பதிப்பாளர்கள் இந்த புத்தக்க கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இக்கண்காட்சியினை இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்வையிட உள்ளனர்.
இப்புத்தக திருவிழாவினை அமைச்சர் பெருமக்கள் துவக்கி வைக்க உள்ளார்கள். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர காவல் ஆணையர் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர், உள்ளிட்டவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்விழாவில் தினந்தோறும் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும் கலைஞர்களும் கலந்துகொள்ளும் கலை இலக்கிய நிகழ்வுகள். சிறப்பு நிகழ்ச்சிகள், கவி அரங்கம், கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, நாடகம், விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளவேண்டும் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் நாட்கள் நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள்.
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாகபட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்தார்.