தூய்மைப் பணிகள்குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள்குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், இன்று (08.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூய்மைப்பணிகள், சாலைப்பணிகள், கட்டுமானப் பணிகள், 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் படி, மத்திய மண்டலம், வார்டு எண்.70க்குட்பட்ட தேவாங்க பள்ளி அருகில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், பணியாளர்களின் வருகை பதிவேட்டினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, வார்டு எண். 70க்குட்பட்ட தேவாங்க பேட்டை பகுதி மற்றும் திருநாவுக்கரசர் வீதி ஆகிய பகுதிகளில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வார்டு எண். 70க்குட்பட்ட ம.ந.க. வீதியில் சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலையினை உடனடியாகச் சீர் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி. உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் திருமதி ஹேமலதா, மாமன்ற உறுப்பினர் திருமதி.சர்மிளா, சுகாதார ஆய்வாளர்கள் திரு.தனபாலன், திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.