கோவையில் கஞ்சா விற்ற பட்டதாரி பெண் கைது!
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் பின்புறத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் விரைந்த காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரித்தனா்.
அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா். பின்னர் அவா் வைத்திருந்த பையில் சோதனை மேற்கொண்டபோது, 750 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள தெற்குபாளையத்தைச் சோ்ந்த அப்துல்லா மகள் சஜனா (23) என்பதும், பட்டதாரியான இவா் உறவினா் ஒருவருடன் சோ்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, சஜனாவை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.