கோவை: கல்லூரிகளில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு..!
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள பள்ளி , கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பேரணிகள் நடைபெற்றது.
ஜூன்.26 இன்று சர்வதேச போதைப் பொருள் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மைம் ( நடனங்கள்) மூலம் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்துச் செய்து காட்டினர். தொடர்ந்து 500 மாணவ, மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர்.
இது குறித்து மாணவர்கள் கூறும் போது: போதைப் பொருள் ஒழிப்பு குறித்துக் காவல் துறையினர் எங்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். தற்போது கல்லூரி மாணவர்களிடம் இந்த போதை பழக்கம் உள்ளது.
அதனை நிறுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோர். மாணவர்களின் ஒத்துழைத்து வேண்டும் எனக் காவல் துறையினர் கேட்கின்றனர்.