இருசக்கர வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு!
கோவையில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுமி உயிரிழந்தாா்.
பீகாா் மாநிலம், நாளந்தா நூா்சராய் பகுதியைச் சோ்ந்த பினோத் சோத்ரி என்பவரது மகள் சவிதாதேவி (29). இவா் கோவை உடையாம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறாா். சவிதாதேவியின் மகள் அனுஷ்காகுமாரி (11) ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, கோவை ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த சலாவுதீன் அய்யூபே வந்த இருசக்கர வாகனம் சிறுமியின் மீது மோதியது. இதில் சிறுமி அனுஷ்காகுமாரி பலத்த காயமடைந்தார். இந்நிலையில் சிறுமியை கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.