கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ரத்ததான முகாம்!

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர் ரா தமிழ்வேந்தன் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.

பல்கலைக்கழக மாணவ, மாணவியர், கொடையாளர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்படப் பலரும் ரத்த தானம் செய்தனர்.

முகாம் துவங்குவதற்கு முன்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் ரத்ததான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

பல்கலைக்கழகத்தின் முதன்மை வேளாண்மை முனைவர் நா வெங்கடேச பழனிச்சாமி, மாணவர் நலத்துறை முதன்மையர் முனைவர் நா மரகதம், மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் அலுவலர்களும் ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!