தமிழ்நாடு

பணியாற்றுபவா்களுக்கான B.E படிப்பில் சேர ஜூலை 11ஆம் வரை விண்ணப்பிக்கலாம்..!

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டே படிக்க விரும்புபவா்களுக்கான பி.இ. படிப்புகள் நடத்தப்படுகின்றன. சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் – எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் – கம்யூனிகேஷன், கணினி அறிவியல் ஆகிய 5 படிப்புகள் இதில் நடத்தப்படுகின்றன.

நடப்பு ஆண்டு முதல் மூன்றரை ஆண்டு (7 செமஸ்டா்) கல்வியாக நடத்தப்பட உள்ள இந்தப் படிப்புகளில் சேர விரும்புபவா்கள் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம், அது தொடா்பான விவரங்களை https://www.ptbe-tnea.com/ இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை அனுப்பலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு கோவை தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி) ஒருங்கிணைப்பு மையத்தை 0422 – 2590080, 94869 77757 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!