வீட்டின் வளாகத்திலிருந்து மாட்டு திவானம் உண்ட காட்டு யானை!
கோயம்புத்தூர் நரசீபுரம் பகுதியில் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வாசலில் வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனத்தை உண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் நரசீபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியிலிருந்து வெவ்ளியேறும் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நரசீபுரம் பகுதிக்கு வந்த காட்டு யானை பிரதீப் என்பவரது வீட்டின் வளாகத்தில் புகுந்த அங்கிருந்த அரிசியை உண்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் அதே பகுதிக்குள் உலா வந்த காட்டு யானை அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபர் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்த மாட்டுத் தீவனங்களைச் சாவகாசமாக உண்டு சென்றது.
இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அடிக்கடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டு யானை உலா வருவதால் அதனைக் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.