கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் 1.06 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் தொழில்நுட்பங்களைப் பரிமாற்றம் செய்வதற்கு வழி வகுக்கும்.

பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் மூலம் உயிரி தொழில்நுட்பவியல், உயிர் தகவலியல், மரபியல், மூலக்கூறு கண்டறிதல், மரபணு தனிமைப்படுத்தல். உயிரணு வளர்ப்பு மற்றும் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.

இதன் தொடக்கமாக, உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு இடையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று நடைபெற்றது.

உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் சார்பாகத் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குனர் முனைவர். ந.செந்தில், வேளாண் நிறுவனங்களான கோயம்புத்தூர் பேச்சி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் (M/s. Pechi Foods private Limited) மற்றும் மதுரை இன்னோ கிரீன் இந்தியா மார்க்கெட்டிங் (M/s. Innogreen India Marketing) உடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் மற்றும் பதிவாளர் முனைவர். இரா. தமிழ்வேந்தன் முன்னிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (30.05.2025) கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் முனைவர். ரா. ரவிகேசவன், பயிர் மேலாண்மை இயக்குனர் முனைவர். மு.க.கலாராணி, இயற்கை வள மேளாண்மை இயக்குனர் முனைவர். U. பாலசுப்ரமணியன். தாவர உயிரி தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர்.ஈ.கோகிலாதேவி, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். எல்.அருள், உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய அலுவலர்கள் மற்றும் வேளாண் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!