கழிவு நீர் கலந்த மழை நீர் குடியிறுப்புக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!
கோயம்புத்தூர்: கனமழையால் ஆலாந்துறை அடுத்த செம்மேடு திரு.வி்.க வீதி குடியிருப்புக்குள் கழிவு நீர் கலந்த மழை நீர் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்கள், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாகக் கோயம்புத்தூர் ஆலாந்துறை அடுத்த செம்மேடு திரு.வி.க வீதிக்குள் கழிவு நீர் கலந்த, மழை நீர் புகுந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மழை புகுந்ததால் நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதி தாழ்வான இடத்தில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரச்சனை தொடர்ந்து வருவதால் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.