கோயம்புத்தூர், குறிச்சி – குனியமுத்தூர் குடிநீர் திட்டம்: குழாய்கள் பொருத்தும் பணி தீவிரம்!
கோயம்புத்தூர், போத்தனூரில் குடிநீர் யு.ஜி.டி திட்டத்திற்குக் குழாய் கடந்து செல்லும் விதமாக இரும்பு பாலம் அமைக்கும் பணி முடிந்து உள்ளது. இரு நாட்கள் குழாய் பொருத்தும் பணி நடைபெற இருக்கிறது.
மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட போத்தனூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வாயிலாக ரூபாய் 591.14 கோடி மதிப்பீட்டில் குறிச்சி, குனியமுத்தூர் குடிநீர் திட்டம் பாதாளச் சாக்கடை திட்டம் யு ஜி டி செயல்படுத்துகிறது.
இதற்கென குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போத்தனூர் ரயில்வே நிலையத்தில் அருகே பாலக்காடு ரயில்வே பாதைக்கும் மேலேயும், பொள்ளாச்சி ரயில்வே பாதைக்கு அடியிலும், இரும்பு பாலம் அமைத்து குழாய்கள் கடந்து செல்லும் வழிவகை செய்யப்படுகிறது.
இதற்கென நேற்று முதல் நாளை வரை அந்த வழித் தடகத்தில் தினமும் பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை ரயில்கள் இயக்கம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நேற்று ராட்சத கிரேன்கள் உதவியுடன் இரும்பு பாலம் அமைக்கும் பணி முடிந்து உள்ள நிலையில் குழாய்கள் பொருத்தும் பணி இன்றும், நாளையும் நடக்கிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இரும்பு பாலத்தின் மீது 24 மீட்டர் நீளத்துக்குக் குடிநீர் திட்டத்திற்குக் குழாய்கள் பொருத்தப்படுகின்றன.
இதில் யு.ஜி.டி திட்டத்திற்கு முன் 800 மில்லி மீட்டர் மற்றும் 600 மில்லி மீட்டர் விட்டமுடைய குழாய்களும், குடிநீர் திட்டத்திற்கு 350 மற்றும் 300 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட குழாய்கள் பொருத்தப்படுகின்றன.
இந்த நான்கு குழாய்களும் பொருத்தும் பணி இரண்டு நாட்களில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.