சிறுவாணித் தண்ணீரைப் போல் ஒரு சுத்தமான ஆட்சி அமையும் – விஜய்
கோயம்புத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. நேற்று முதல் நாள் கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில், இன்று 2வது நாளாகவும் நடைபெற்றது.
இதில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசும் போது,
இது ஓட்டுக்காக நடத்தப்படக் கூடிய ஒரு கருத்தரங்கம் இல்லை என்று பேசி இருந்தேன். காரணம் தமிழக வெற்றி கழகம் அரசியல் ஆதாயத்திற்காகத் தொடங்கப்பட்டது அல்ல. சமரசம் என்ற பேச்சிக்கே இங்க இடம் இல்லை. இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால், எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்.
நம்முடைய ஆட்சி அமைந்ததும், சுத்தமான அரசாக நமது ஆட்சி இருக்கும். நம்முடைய ஆட்சியில், ஊழல் இருக்காது, திருடர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் தைரியமாக வாக்குச் சாவடி முகவர்கள் மக்களை அணுக வேண்டும்.
நீங்கள் மக்களிடம் சென்று அணுகும் போது, அறிஞர் அண்ணா சொன்னது போல “மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய் ’’ என்பது தான்.
இதை நீங்கள் புரிந்து கொண்டால், உங்க ஊரு சிறுவாணித் தண்ணீரைப் போல் அவ்வளவு சுத்தமான ஒரு ஆட்சியாக இது அமையும்.
இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால், தமிழக வெற்றி கழகத்தினுடைய ஆட்சி ஒரு தெளிவான, உண்மையான, வெளிப்படையான, நிர்வாகம் செய்யக் கூடிய ஒரு ஆட்சியாக இது அமையும்.
அதனால் இதனை ஒவ்வொருவரும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பூத்திற்க்கு வாக்கு செலுத்த வரக் கூடிய மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டியது நம்முடைய கடமை.
குடும்பம், குடும்பமாகக் கோவிலுக்குச் செல்வதைப் போல், குடும்பமாகப் பண்டிகை கொண்டாடுவதைப் போல, நமக்காக குடும்பமாக வந்து ஓட்டுப் போடும் மக்களுக்காகவும் அதைச் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் தவெக என்பது மற்ற கட்சிகளைப் போல் அல்ல, ஆனால் ஒரு விடுதலைப் பேரணி என்று தெரியும். இந்த வெற்றியை நாம் அடைவதற்கு , உங்களுடைய செயல்பாடுகள் தான் மிகவும், முக்கியம். அதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.
அனைவரும் உறுதியோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று பேசினார்