அரசியல்இந்தியா

பாகிஸ்தான் சரியான பாடம் கற்பிக்கும் இந்தியா – ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்


கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வருகை புரிந்த மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் தொடர்பான கேள்விக்கு, 1947 சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை எவ்வித பாடமும் கற்றுக்கொள்ளாத நாடு ஒன்று இருக்கு என்றால் அது பாகிஸ்தான். பங்களா தேசத்தை இழந்தும் இன்றைக்கும் தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடாக இருக்கிறதே தவிர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எதுவும் செய்யவில்லை.

மீண்டும் இந்தியாவைச் சீண்டியிருப்பதும் மக்களைக் கொன்று குவித்திருப்பதற்குச் சரியான பாடம் அவர்கள் பெரும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும் என உறுதிப்படத் தெரிவித்த அவர் பாட்ஷாவையும் பாகிஸ்தான் தீவிரவாதத்தையும் ஆதரிக்கும் போக்கைக் கைவிட வேண்டும் என்றார்.

இஸ்லாமியர்கள் என்பது வேறு இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்பது வேறு இதனைத் தமிழக மக்கள் உணர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

உதகையில் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் ஆளுநர் ஆர் என் ரவி நடத்திய துணைவேந்தர்கள் மாநாடு குறித்த கேள்விக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இரு வேறு விதமாக இருக்கிறது கேரளாவைப் பொறுத்தளவில் கேரள ஆளுநர் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் என்று அதே உச்ச நீதிமன்றம் சொல்லி உள்ளது, இப்போது அதற்கு மாறான தீர்ப்பு வந்துள்ளது.

சட்ட வல்லுநர்களைக் கொண்டு இதற்குச் சரியான தீர்வை காண வேண்டும் எதிர்காலத்தில் இதுபோல கருத்து மோதல்கள் வருவது நல்லதல்ல உரியத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

மேலும் துணைவேந்தர்களை மிரட்டியதாகத் தமிழக ஆளுநர் குற்றம் சாட்டியது தொடர்பான கேள்விக்குத் தமிழகத்தில் எல்லாருக்கும் மிரட்டல்கள் வருவது சாதாரண விஷயம் தான் இதில் துணைவேந்தர்கள் மட்டும் விதிவிலக்கல்ல என்றார்.

தொடர்ந்து விஜய் அரசியல் தொடர்பான கேள்விக்கு நயினார் நாகேந்திரனிடம் கேளுங்கள் அதே சமயம் அரசியலில் மாற்றம் வருவது இயல்பு அது எத்தகைய மாற்றம் என்பதை நான் சொல்ல இயலாது என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!