Healthசெய்திகள்

கோவையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான சிறப்புப் பயிற்சி மையம் துவக்கம்..!


கோவை சாய்பாபா காலணியில் உள்ள கங்கா மருத்துவமனையில் (தனியார்) ஜான்சன் & ஜான்சன் மெடெக் நிறுவனம் உலகளவில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான முதல் உலகளாவிய சிறப்பு மையம் தொடங்கியது.

இந்த சிறப்பு மையத்தில் சர்வதேச நாடுகளான சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து 100 மருத்துவ நிபுணர்கள் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளனர்.

இது குறித்து கங்கா மருத்துவமனை எலும்பியல் நிபுணர் ராஜசேகர் கூறியதாவது:- ஜான்சன் & ஜான்சன் மெடெக் 130 ஆண்டுகளாகப் புதுமையான மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்கள் மூலம் நோயாளிகளுக்குப் பராமரிப்பின் சிறந்த பங்களிப்பு அளித்து வருகிறது.

தற்போது கங்கா மருத்துவமனை சார்ப்பில் புரிந்துணர்வு ஒப்பந்த மூலம் உலகளாவிய அறுவை சிகிச்சை, தொழில்நுட்பங்கள் மற்றும் நோயாளிகள் பராமரிப்பு குறித்துச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி மூலமாக மருத்துவத்தின் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல், கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்களுடன் ஆராய்ச்சி உள்ளிட்ட வைத்துக் குறித்து எடுத்துரைக்கப்படும்.

மேலும் அடிப்படை அறுவை சிகிச்சை முதல் மேம்பட்ட ரோபோ மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் வரை முழு அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதிவேக பயிற்சி அனுபவங்களை உருவாக்க நிபுணர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 100 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் இதனால் உலக நாடுகளிலிருந்து இந்தியாவிற்குப் பயிற்சிக்காக மருத்துவர் நிபுணர்கள் வருவார்கள் என்று மருத்துவர் ராஜசேகர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!