அரசியல்தமிழ்நாடு

கோயம்புத்தூர் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த, ஒன்றிய ரயில்வே அமைச்சரிடன் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மனு!!!

கோயம்புத்தூர் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-யிடம் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து மனு !!!

தெற்கு ரயில்வேயில் வருவாய் ஈட்டும் முக்கிய ரயில் நிலையமான கோயம்புத்தூர், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாக இப்பகுதி மக்களின் ரயில் பயணத்தில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கூடுதல் ரயில் சேவைகளை வழங்கவும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து இருக்கிறார் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,

கோயம்புத்தூரின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய, மயிலாடுதுறை – தஞ்சாவூர் ரயில் சேவையை பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு வரை நீட்டிக்க வேண்டும். இந்த திட்டம் ஏற்கனவே ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்து இருக்கிறது. அதே போல, புதிய ரயில் சேவை:

ஈரோடு – ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் சேவையை கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும். கோயம்புத்தூர் – பொள்ளாச்சி விரைவு ரயில் சேவையை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் மற்றும் திருவனந்தபுரம் – கோயம்புத்தூர் இடையே எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு வழியாக புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்றும், நாகர்கோவில், கோயம்புத்தூர், நாகர்கோவில் – பழனி இடையே ஜனசதாப்தி ரயில் சேவையை இயக்க வேண்டும்.

இது பழனி மற்றும் மதுரைக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். அதேபோல கோயம்புத்தூரில் மக்கள் தொகை 35 லட்சத்தை தாண்டி உள்ளதால், நகரின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய மூன்று ரயில் நிலையங்களை மேம்படுத்தி தர வேண்டும்.

அதோடு கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையத்தில் கூடுதல் நடை மேடைகள் மற்றும் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், சரக்கு முனையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். போத்தனூர் சந்திப்பில் ஏ.பி.எஸ்.எஸ் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் தாமதமாவதால், பிட் லைன்கள் மற்றும் ஸ்டேபிளிங் லைன்களை விரைந்து அமைக்க வேண்டும் என்றும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், கோயம்புத்தூர் மக்களின் ரயில் பயணம் எளிதாகும் என்றும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்து உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!