Top Storiesதமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்வு – அமைச்சர் செந்தில்பாலாஜி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி துறை ரீதியாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

“தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம், மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 2,000, விற்பனையாளர்களுக்கு ரூ. 2,000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ. 2,000 என 1 ஆம் தேதி முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஒரு ஆண்டுக்கு ரூ. 64.08 கோடி கூடுதல் செலவாகும்” என்று அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!