டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலம் அருகே டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான சட்ட சமூகப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன கோசங்களை எழுப்பினர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ( சி.ஐ.டி.யு ) மாநில துணைப் பொதுச்செயலாளர் யான்: டாஸ்மாக் பொதுத்துறை நிறுவனம் மூலம் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஈட்டி தரும் எங்களுக்கு எந்த சட்ட விடுமுறையோ, விதிகளோ இல்லாமல் கடந்த 22 ஆண்டுகளாகச் சட்ட சமூகப் பாதுகாப்பு இன்றி பணியாற்றி வருகிறோம்.
பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம் இல்லை, 58 வயதை 60 ஆக வயது உயர்த்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை தற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேண்டும் எனத் தமிழக முதல்வரை பணியுடன் கேட்டுக்கொள்கிறோம். நிறைவேற்றாத பட்சத்தில் டாஸ்மாக் தொழில் சங்கங்களுடன் இதர தொழில் சங்கங்களை இணைத்து அடுத்தகட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறோம்.
காலி பாட்டில்கள் பெறுவது தொடர்பாக அரசு நிர்வாகம் கூறியதை நிறைவேற்றி வருகிறோம், ஆனால் இதில் கூடுதலான வேலைப் பளு உள்ளது. ஏற்கனவே கடைகளில் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளது. எனவே காலிப் பாட்டில்களைப் பெறுவதை அவுட் சோர்சிங் முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம்.
தமிழகம் முழுவதும் 26 ஆயிரம் பேர் எந்த ஒரு சட்ட சமூகப் பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றி வருகிறோம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும் சம வேலைக்குச் சம ஊதியம் நடைமுறைப்படுத்தவில்லை, சமீபத்தில் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் 480 வேலை முடித்தவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது,.
அதனையும் அமல்படுத்தாமல் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும், மேல்முறையீடு என்ற பெயரில் காலம் கடத்த முயற்சி செய்கிறது. இதனை உடனடியாக திரும்பப் பெற்று, இந்த தீர்ப்பு அமல்படுத்தி திராவிட மாடல் அரசு எனக் கூறும் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்