மருதமலை கோயிலுக்கு நான்கு சக்கர வாகனத்தில் செல்ல தடை..!
முருகனின் ஏழாம் படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்புகளின் படி பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திருக்கோயிலில் பணிகள் நடைபெறுவதால் போதிய வாகனம் நிறுத்துமிடம் இல்லாததால், குறிப்பிட்ட அளவிலான வாகனங்கள் மட்டுமே தினமும் அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இனி வரும் காலங்களில் செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் மலைக் கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி இந்தக் குறிப்பிட்ட நாட்களில் வரும் பக்தர்கள் மலைப் படிக்கட்டுகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் மட்டும் பயணித்து சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது