கோயம்புத்தூர்: அதிநவீன கண் அறுவை சிகிச்சை கருவியை அறிமுகம் செய்தார் கண்ணழகி…!
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டிரினிட்டி கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை கருவி அறிமுக விழா நடைபெற்றது. தென்னிந்திய அளவில் அதி நவீன தொழில் நுட்பமான இந்த கருவியை பிரபல திரைப்பட நடிகை மீனா துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் பேசிய நடிகை மீனா, கோவைக்கும் எனக்கும் நல்ல உறவு இருக்கிறது. முன்பு நான் அடிக்கடி கோவைக்கு வந்துள்ளேன். பிரபல இனிப்பு கடையில் ஸ்வீட் வாங்கி சென்றுள்ளேன்.
உடலின் பாகங்களான இருதயம், கல்லீரல் போன்ற உறுப்புக்களை பாதுகாப்பது போல கண்களையும் பாதுகாப்பதில் தற்போது அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நானும் தற்போது படிப்பதற்கு கண் கணரணாடிகளை பயன்படுத்த துவங்கி உள்ளேன் என்று கூறினார். பின்னர் காண்டோரா லாசிக் தொழில் நுட்பம் குறித்து மருத்துவரிடம் கேள்வி எழுப்பிய மீனா, தாம் பிறகு பரிசோதனை செய்து கொள்வதாக புன்னகையுடன் கூறினார்..