ஜெயிலர் – 2 படப்பிடிப்பிற்க்காக கோயம்புத்தூர் வந்த ரஜினிகாந்த்-க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…!
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த நடிகர் ரஜினிகாந்த்-க்கு ரசிகர் உற்சாக வரவேற்பளித்தனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஆனைக்கட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார். கோயம்புத்தூர் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த அவர் :
ஜெயிலர் 2 படத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பிற்காகக் கோயம்புத்தூர் வந்துள்ளதாகவும், படம் வெளியீடு தேதி இன்னும் தெரியவில்லை எனவும் கூறினார். தொடர்ந்து விமான நிலையத்தில் திரண்டு இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக காரில் ஏறி ரஜினிகாந்த் கை காண்பிக்கவே அங்கிருந்த ரசிகர்கள் தலைவா தலைவா என முழக்கமிட்டு உற்சாகமடைந்தனர்