செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு!
கோயம்புத்தூர் மாநகராட்சி செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் முதற்கட்டமாக ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் சுமார் 45.00 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, ஆடிஸ் வீதியில் அமைந்துள்ள அறிவுசார் மையத்தினை மேயர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.