கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் இலவச “மல்டிமீடியா” பயிற்சி வகுப்பு – 1500 விண்ணப்பம்
கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் நடைபெறும் இலவச “மல்டிமீடியா” பயிற்சி வகுப்பில் சேர பட்டதாரி பெண்கள், இல்லத்தரசிகள் என சுமார் 1,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
முதல் கட்ட பயிற்சியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 60 பேர் பங்கேற்பு
கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் பட்டதாரிகள், பெண்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான இலவச திறன்மேம்பாடுகள் பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்தி நடத்தி வருகின்றனர். ஒரு மாதம் முதல் 2 மாதங்கள் வரை நடைபெறும் இந்த திறன் மேம்பாடு பயிற்சி வகுப்புகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பயின்று, வேலைகளிலும் சேர்ந்து வருகின்றனர். இதுவரை தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி, மனித வள மேம்பாடு, மெக்கானிக் பிரிவுகளுக்கு இலவச திறன்மேம்பாடு பயிற்சிகள் வழங்கப்பட்டதுள்ளது.
இந்நிலையில் போட்டோ ஷாப், விடியோ எடிட்டிங் உள்ளிட்ட மல்டிமீடியா இலவச பயிற்சி வகுப்புக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் மூலம் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இதையடுத்து நேரில் அழைத்து விடுக்கப்பட்டது. இதில் சுமார் 450 பேரில் நேரில் வந்தனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு, இல்லத்தரசிகள், ஏழை, எளிய தொழில் முனைவோர், கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் என சுமார் 60 பேர் முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்தவர்களுக்கு வகுப்புகள் துவங்கியது. 2 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் செய்முறை பயிற்சிக்காக மடிக்கணினி இல்லாத நபர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. கோவை மாநகராட்சியின் இந்த முன்னெடுப்புக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.