அரசியல்கோயம்புத்தூர்

தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாக்கும் : அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…!

கோயம்புத்தூரில் நடைபெறும் முன்னாள்  எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோவை விமான நிலையம் வந்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : 

மொழியை மையப்படுத்தி  மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாக்கும். இது அண்ணா காலத்திலிருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து ஜவஹர்லால் நேருவால் பார்லிமெண்டிலேயே கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் இரு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் மூன்று மற்றும் நான்காவது மொழியைப் படித்துக் கொள்ளலாம். இதில் மாற்றுக் கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும், போராட்டத்தில் இறங்கும். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெளிவான அறிக்கையே வெளியிட்டு இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து, அம்மா, தற்போது வரை எங்களுடைய கொள்கை இரு மொழிக் கொள்கை தான்.  தேவைப்படும் என்று நினைப்பவர்கள் மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ளலாம். ஆனால் மொழி திணிக்கப்படக் கூடாது.  வழக்கத்தில் என்ன இருக்கிறதோ அதன்படி சென்றால் எந்த பிரச்சனையும் இருக்காது. இவர்கள் மொழி பிரச்சனையைக் கொண்டு வருகிறார்கள், அப்படி அது பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் பட்சத்தில் நிறையப் பிரச்சனைகள் உருவாக. மத்திய அரசு தேவையில்லாத பிரச்சனைகளைத் தமிழகத்தில் உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்கிறது.  அதேபோல எந்த கட்சி வளர்ந்தாலும் அ.தி.மு.க வுக்கான தனி பெரும்பான்மை என்றும் குறையாது. தி.மு.க வை எதிர்க்கின்ற திறமையோ வீழ்த்துகிற திறமையோ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமே உண்டு. மற்ற கட்சிகள் வரலாம் அதன் வரலாறுகளை, அவர்கள் தேர்தலைச் சந்தித்த பிறகு தான் தெரியும் என்று கூறினார்

மறுசீரமைப்பு பற்றிய கேள்விக்கு, எடப்பாடியார் தெளிவாகக் கூறியதைப் போன்று, பார்லிமென்ட் எண்ணிக்கை கூடித் தான் வரவேண்டும்,  குறைந்து வந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம். குறைந்தால் அண்ணா திமுக கடுமையாக எதிர்க்கும் என்பதை பொதுச் செயலாளர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

தமிழகத்திற்கான நிதியைக் கொடுக்க வேண்டும்,  அனைத்து மாநிலத்திற்கும் கொடுக்கக் கூடிய சம அளவு தமிழகத்திற்கும் மத்திய அரசு கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க வின் நிலைப்பாடு இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மாநில அரசு என்ன நிதி கேட்கிறார்களோ அதை மத்திய அரசு கொடுக்க வேண்டும், அப்பொழுது தான் நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்று கூறினார்.

மாபா பாண்டியராஜனை நான் பேசியது குறித்த விவாகரத்தில் எந்த  பிரச்சனையுமில்லை.அந்த விவகாரம் முற்றுப்புள்ளி ஆகிவிட்டது.நான் அவரை பற்றிப் பேசவே இல்லை. என் மீது  பதியப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது.இன்னும் தீர்ப்பு வரவில்லை..

தமிழகத்திற்கு எல்லாம் மாநில போலச் சமமான நிதியை வழங்கவேண்டும் போதிய நிதி  வழங்க வேண்டும்.தேவையான ஜி.எஸ்.டி வாங்குகிறார்கள் என்றால் போதிய நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். டாஸ்மார்க் அலுவலகத்தில் ரெய்டு திடீரென்று நடக்குது.அப்புறம் நிற்கிறது. இன்னும் முடிவு வரவில்லை. அதிமுகவுக்குப் பெரிய ஆதரவு இன்று தமிழகத்தில் உள்ளது. மற்ற எந்த கட்சி தமிழகத்தில் வளர்ந்திருக்கிறதா என்பதைத் தேர்தலுக்குப் பிறகு தான் கூற முடியும் எனக் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!